×

பெங்களூரு காட்டன்பேட்டை ஐய்யங்கார் சாலையில் குவிந்துள்ள குப்பை கழிவுகள்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெங்களூரு: பெங்களூரு காட்டன்பேட்டை ஐய்யங்கார் சாலையில் குவிந்துள்ள குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பெங்களூரு காட்டன் பேட்டை மார்க்கெட்டில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படி மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஐய்யங்கார் சாலையில் குப்பை, கழிவுகள் கொட்டி சேமிக்கப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  இதனால் சாலையில் குவிந்துள்ள குப்பை, கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது:காட்டன் பேட்டை மார்கெட்டுக்கு தினமும் ஆயிரம் கணக்கான மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். மக்கள் கூட்டம் நிறைந்த மார்க்கெட்டில் ஐய்யங்கார் சாலையில் குப்பை, கழிவுகள் குவிந்துள்ளதால் மக்களும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.  அதே போல் குப்பை, கழிவுகள் சாலையில் குவிந்துள்ளதால் துர்நாற்றம் ஏற்பட்டு அவ்வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலையில் குவிந்துள்ள குப்பை, கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.


Tags : Iyengar Road ,Cottonpet ,Bangalore , Garbage accumulated on Iyengar Road, Cottonpet, Bangalore: Corporation demands action
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...