×

எஸ்.ஐ.டி விசாரணைக்கு பின்னர் சி.டி போலியா, இல்லையா என்பது தெரியவரும்: உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

பெங்களூரு: எஸ்.ஐ.டி விசாரணை நடத்தி முடித்த பின்னர் சி.டி போலியானதா, ஒரிஜினலா என்பது வெளிச்சத்திற்கு வரும் என்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில நீர்பாசனத்துறை முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆபாச சி.டி விவகாரம் குறித்து எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் கமிஷனர் சோமந்த் முகர்ஜி தலைமையிலான போலீசார் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கப்பன்பார்க் போலீசார் விசாரணை நடத்திய அனைத்து அறிக்கையும், எஸ்.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.டியும் எஸ்.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.ஐ.டி போலீசார், எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆர்.டிநகரில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும்போது; முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜாரகிஹோளியின் சி.டி விவகாரத்தில் பல்வேறு சந்தேகம் உள்ளது.

தற்போது இந்த வழக்கு எஸ்.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கவேண்டுமென்று நெருக்கடி கொடுக்கப்படவில்லை. துரிதமாக முடித்து, மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றார்போன்று விசாரணை நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். இதில் போலீசார் மற்றும் எஸ்.ஐ.டிக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்கை திரும்ப பெற்றிருப்பது குறித்து எஸ்.ஐ.டி விசாரணை நடத்தும். அதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எஸ்.ஐ.டி கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முழு விசாரணை முடிந்து அறிக்கை அளித்த பின்னர் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

விசாறரணை முடிக்கிவிடப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சிகள் இந்த சி.டி போலியானதுதானே, எதற்காக எஸ்.ஐ.டி என்று கேட்கின்றனர்.  போலியான சி.டியாக இருந்தாலும் தயாரித்தவர்கள் யார் என்பது தெரியவேண்டுமல்லவா. அதனால்தான் எஸ்.ஐ.டி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எப்படி, யார் யாரிடம் விசாரணை நடத்தவேண்டுமென்பது எஸ்.ஐ.டிக்கு அதிகாரிகளுக்கு தெரியும். விரைவில் உண்மை நிலவரம் பொதுமக்களுக்கு தெரியவரும்’’ என்று பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.



Tags : SIT ,Home Minister ,Basavaraj , SID probe will reveal whether CD is fake or not: Home Minister Basavaraj
× RELATED மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து