×

சிபிஎம் போட்டியிடும் 6 தொகுதிகள்

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம், கோவில்பட்டி, கந்தவர்கோட்டை (தனி), அரூர் (தனி), திண்டுக்கல், கீழ்வேளூர் (தனி) உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : CPM , CPM contesting 6 constituencies
× RELATED ஆக்சிலேட்டருக்கு பதிலாக பிரேக்கை...