×

அமமுக 2ம் கட்ட பட்டியல் 50 வேட்பாளர்களின் வெளியீடு: கோவில்பட்டி அமைச்சர் கடம்பூர் ராஜு-டிடிவி தினகரன் நேரடி

சென்னை: அமமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: அமமுக பொதுச்ெசயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் குடியாத்தம் (தனி) தொகுதியிலும்,   மண்டபம் ஜி.முனியசாமி ராமநாதபுரம் தொகுதியிலும், பாலகிருஷ்ணன் (எ) ஏ.பி.பால்கண்ணன் நெல்ைல தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ, எம்.கோதண்டபாணி திருப்போரூர் தொகுதியிலும், க.டேவிட் அண்ணாதுரை திருப்பரங்குன்றம் தொகுதியிலும் போட்டியிடுவார்கள். முன்னாள் எம்எல்ஏ, ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.மாரியப்பன் கென்னடி மானாமதுரை (தனி) தொகுதியிலும், ம.கரிகாலன் தாம்பரம் தொகுதியிலும், வேலு.கார்த்திகேயன் திருவையாறு தொகுதியிலும்,  ஆர்.பரணீஸ்வரன் தியாகராயர் நகர் தொகுதியிலும், முன்னாள் மேயர் திருப்பூர் ஏ. விசாலாட்சி திருப்பூர் தெற்கு தொகுதியிலும், ஆர். பாலசுந்தரம் விழுப்புரம், சாத்தூர் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் சாத்தூர், முன்னாள் எம்எல்ஏ பொன்.ராஜா பொன்னேரி ( தனி)யிலும் போட்டியிடுவார்கள்.

முன்னாள் எம்எல்ஏ, டி.ஏ. ஏழுமலை பூந்தமல்லி (தனி), முன்னாள் எம்எல்ஏ, எஸ்.வேதாச்சலம் அம்பத்தூர், முன்னாள் எம்எல்ஏ, வெங்கடாஜலம் சேலம் தெற்கு, முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.ரோகிணி கிருஷ்ணகுமார் கிணத்துக்கடவு, முன்னாள் எம்எல்ஏ, தொட்டியம். எம்.ராஜசேகரன் மண்ணச்சநல்லூர், முன்னாள் எம்எல்ஏ, எம்.முருகன் முதுகுளத்தூர், இ.லக்கி முருகன் மதுரவாயல், டி.தஷ்ணாமூர்த்தி மாதவரம், லட்சுமி நாராயணன் பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள்.எல்.ராஜேந்திரன் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலும், வி.டி.சத்யா(எ) சதீஷ்குமார் அணைக்கட்டு, ஏ.ஞானசேகர் திருப்பத்தூர்,  எஸ்.கணேசகுமார் பர்கூர், எம்.மாரேகவுடு ஓசூர், மா.கி.வரதராஜன் செய்யாறு, ஏ.ெகளதம் சாகர் செஞ்சி, கே.கே.மாதேஸ்வரன் ஓமலூர் தொகுதியிலும், பூக்கடை என்.சேகர் எடப்பாடி தொகுதியிலும், பி.பி.சாமிநாதன் பரமத்தி வேலூர் தொகுதியிலும், ஆர்.ேஹமலதா திருச்செங்கோடு தொகுதியிலும்,  எஸ்.ஆர்.செல்வம் அந்தியூர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள். எஸ்.கலைச்செல்வன் குன்னூர்தொகுதியிலும், ஆர்.ஜோதிமணி பல்லடம் தொகுதியிலும், என்.ஆர்.அப்பாத்துரை கோவைவடக்கு தொகுதியிலும், பி.ராமுத்தேவர் திண்டுக்கல் தொகுதியிலும், எஸ்.காமராஜ் மன்னார்குடி தொகுதியிலும்,  மா.சேகர் ஒரத்தநாடு தொகுதியிலும், தேர்போகி வி.பாண்டி காரைக்குடி தொகுதியிலும்,  ஆர்.ஜெயக்குமார் ஆண்டிபட்டி தொகுதியிலும், எம்.முத்துச்சாமி போடிநாயக்கனூர் தொகுதியிலும், எம்.சந்தோஷ்குமார் அறிவித்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக அவருடைய மனைவி சங்கீதா பிரியா வில்லிபுத்தூர் (தனி) தொகுதியிலும், கு.சாமிக்காளை சிவகாசி தொகுதியிலும், வி.டி.என்.ஆனந்த் திருவாடானை தொகுதியிலும், கே.சீனிச்செல்வி விளாத்திகுளம் தொகுதியிலும், பி.செந்தில் முருகன், கன்னியாகுமரி தொகுதியிலும், ரோஸ்லின் அமுதராணி (எ) அம்மு அண்ட்ரோ நாகர்கோவில் தொகுதியிலும் அமமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவ்வாறு டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொகுதி மாறினார் டிடிவி
கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்று கூறப்பட்டு வந்தது. இதனால், அவர் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். கட்சி விலகிய உடன் சீட்சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனுக்கு அதிமுக சார்பில் இந்த ஆண்டு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் நேற்று டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு சாத்தூர் தொகுதியில் அமமுகவில் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kovilpatti ,Minister ,Kadampur Raju ,DTV ,Dinakaran , Amukha 2nd Phase List Release of 50 Candidates: Kovilpatti Minister Kadampur Raju-DTV Dinakaran Live
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!