திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 86 லட்சம் வசூல்

திருத்தணி:  திருத்தணி முருகன் கோயில் மற்றும் உப கோயில்களில் கடந்த 14 தினங்களாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை செலுத்தினர். நேற்று முருகன் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் உண்டியலில் உள்ள பணத்தை பிரித்து எண்ணப்பட்டது.

இதில் 86 லட்சத்து 5 ஆயிரத்து 315 காணிக்கை வசூல் ஆகியிருந்தது. மேலும், நேர்த்தி கடனாக செலுத்திய  தங்கம் 700 கிராம், வெள்ளி 3,550 கிராம்  இருந்தது.  இதில் தங்கம், வெள்ளியும் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது, காணிக்கை பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. வசந்த மண்டபத்தில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர்  பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டது.

Related Stories:

>