×

நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜவில் இணைந்தார்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நேற்று பாஜவில் இணைந்தார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு பிரபல காமெடி நடிகர் செந்தில் நேற்று காலை திடீரென வந்தார். பின்னர் அவர் பாஜ தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது அகில இந்திய பாஜ பொதுச்செயலாளர் மற்றும் தமிழக தேர்தல் பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உடனிருந்தனர். நடிகர் செந்திலுக்கு தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் சால்வை அணிவிதார்.

Tags : Comedian Senthil ,Bajaj , Comedian Senthil joined Bajaj
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி