திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும்  இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். தொடர்ந்து திருமாவளவன் அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வானூர் (தனி), காட்டுமன்னார் கோவில் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>