வேடந்தாங்கல் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது. இவற்றை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வருகின்றனர். மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஏரியில் ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வந்து மரங்களில் தங்கியிருந்து முட்டையிட்டு குஞ்சி பொறித்து செல்கிறது. இதன்படி இந்தாண்டு பருவமழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் நிரம்பியது. இதனால் வெளிநாட்டு பறவைகளான கூழைக்கடா, வர்ணநாரை, நத்தைகொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, கரண்டிவாயன் உள்பட பல பறவைகள் வந்து தங்கியுள்ளது.

இவைகள் ஏரியில் உள்ள மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சி பொறித்துள்ளது. இவற்றை பார்க்க சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொலைநோக்கி மூலம் மரத்தில் தங்கியுள்ள பறவைகளின் அழகை பார்த்து ரசிக்கின்றனர். இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறும்போது, ‘’வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி வசிக்கிறது. ஏராளமான குஞ்சுகளும் கூட்டில் உள்ளது. இவற்றை பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஏரியில் தண்ணீரும் நிரம்பியுள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது’ என்றனர்.

Related Stories:

>