×

தேமுதிக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு: அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியா? குழப்பத்தில் தேமுதிக

சென்னை: தேமுதிக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் வேட்பாளர், தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த கட்சிகளுடனே இந்த சட்டமன்ற தேர்தலிலும் பயணிக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தே.மு.தி.க. நேற்று முன்தினம் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது. எனவே தே.மு.தி.க. இந்த தேர்தலில் எவ்வாறு போட்டியிடப் போகிறார்கள் எனவும், புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுமா என பல கேள்வி எழுந்தது. சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமமுக - தேமுதிக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. தேமுதிக - அமமுக இடையே நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என டிடிவி.தினகரன் அறிவித்தார்.

எனவே அமமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறுத்திய தேமுதிக தனித்துப் போட்டியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக அமமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்ததை நடத்தி வந்தது, தற்போது எந்த ஒரு கூட்டணியிலும் உடன்பாடு ஏற்படாததால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தலையே போனாலும் தேமுதிகறை தலைகுனிற வைக்க மாட்டோம் என நேற்று கடலூரில் பேசினார். எனது திறமையை நிரூபிக்க கொஞ்சம் டைம் வேண்டும் எனவும், தந்தை விஜயகாந்த் சிம்மாசனத்தில் அமர வைப்பேன் எனவும் கூறினார். 10 ஆண்டுகள் அதிமுகவை வாழ வைத்தோம் இனி நாங்கள் நன்றாக வாழ்வோம் என பேசினார். இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறினார். மேலும் தேமுதிக தனித்து போட்டியிட்டால் வேட்பாளராக களமிறங்க தயாரா என்று விருப்பமனு அளித்தவர்களிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேட்டிருந்தார். 


Tags : Depreuka ,Amana , Demuthika - Amutha, alliance, breakdown, confusion Temutika
× RELATED அடுத்தடுத்து நடைபெற உள்ள...