×

வேதாரண்யம் கோடியக்கரையில் கடல் சேற்றில் சிக்கியிருந்த விசைப்படகு 2 மாதத்துக்கு பின் மீட்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் கடல் சேற்றில் சிக்கியிருந்த விசைப்படகு, 2 மாதத்துக்கு பின் நேற்று மீட்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் இருந்து தொண்டீஸ்வரம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கோடியக்கரையில் மீன் பிடிக்க கடந்த 2 மாதத்துக்கு முன் வந்தது. மீன் பிடித்து கொண்டிருந்தபோது கோடியக்கரை அருகே முனங்காட்டு கடற்கரை பகுதியில் கரை தட்டி சேற்றில் படகு சிக்கியது.

இந்த படகை மீட்க கடந்த 2 மாதமாக பல்வேறு கட்ட முயற்சிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். அதன்படி ஒரு மாதத்துக்கு முன் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் இயந்திரமும் சேற்றில் சிக்கியது. பின்னர் பொக்லைன் இயந்திரத்தை மீட்டனர். இந்நிலையில் நேற்று 2 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் சேற்றில் சிக்கியிருந்த விசைப்படகை ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீட்டனர்.

Tags : Vedaranyam Kodiakkara , Vedaranyam, Kodiyakkarai, sea mud, keyboard
× RELATED தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4...