×

திருவில்லிபுத்தூரில் பூஜையில் பங்கேற்றது ஆண்டாள் யானை: பக்தர்கள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை தாக்கப்பட்ட பின் முதன்முறையாக பூஜையில் பங்கேற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா கடந்த சில நாட்களுக்கு தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்களால் கடுமையாக தாக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் முகாம் முடிந்து ஆண்டாள் கோயில் வந்த யானைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கமாக தங்கும் நிலையத்தில் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அங்கு யானையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மாவட்ட கலெக்டர், கோயில் இணை ஆணையர் யானையின் நிலையை நேரில் வந்து பார்த்து விட்டு சென்றனர்.

இந்நிலையில் தாக்கப்பட்ட பின் முதல்முறையாக யானை ஆண்டாள் கோயில் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றது. யானை தாக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக கோயில் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றது. கோயிலில் காலை நடை திறக்கும் போது நடக்கும் விஸ்வரூப தரிசன சிறப்பு பூஜையில் யானை பங்கேற்பது வழக்கம். அந்த முதல் பூஜையில் நேற்று யானை கலந்து கொண்டது பின்னர் கோயில் பிராகாரத்தை யானை சுற்றி வந்தது. முன்னதாக யானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலுக்கு வந்த யானையை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் அதற்கு பிடித்த உணவை கொடுத்து வரவேற்றனர் கோயில் நிகழ்ச்சியில் மீண்டும் யானை பங்கேற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Srivilliputhur ,Andal Elephant , In Srivilliputhur, Pooja, the Andal elephant
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...