×

மூக்கு வழியே கோவிட் தடுப்பு மருந்து சோதனை சென்னை, ஹைதராபாத்தில் தொடக்கம் : பாரத் பயோடெக்கின் முயற்சி பலன் தருமா?

சென்னை : கோவிட்-19-க்கு `கோவாக்ஸின் (COVAXIN) என்ற தடுப்பூசியைக் கண்டறிந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியே வாக்ஸின் செலுத்தும் புதிய ஆராய்ச்சி பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation-CDSCO) பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மூக்கு வழியே கோவிட் வாக்ஸினை செலுத்திப் பரிசோதிக்கும் முறைக்கு அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பேஸ்-1 கிளினிக்கல் ட்ரையலை (Phase-1 Clinical Trial) தொடங்கியுள்ளது இந்நிறுவனம்.

தடுப்பு மருந்தை ஊசியின் வழியாக உடலுக்குள் செலுத்துவதற்குப் பதிலாக, சொட்டு மருந்துபோலவோ, ஸ்பிரே வழியாகவோ மூக்குக்குள் செலுத்தும் முறையே இன்ட்ரா நேஸல் வாக்ஸின் (Intra Nasal vaccine).தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியை, இன்ட்ரா நேஸல் வாக்ஸின் எடுத்துக்கொள்வதால் தவிர்க்கலாம். மேலும் 0.1 மிலி அளவிலான மருந்தை மூக்குக்குள் இட்டுக்கொண்டாலே போதும். உங்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும். இது மிகவும் எளிமையான முறையும்கூட என்கிறது பாரத் பயோடெக் தரப்பு. இந்த நிலையில் சென்னை, ஹதராபாத்தில் சுவாசம் மூலம் தடுப்பு மருந்து இன்று முதல்  முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது.


Tags : Chennai ,Hyderabad ,Bharat Biotech , மூக்கு
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்