×

திமுக கூட்டணி தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ரூட்டி தொகுதி ஒதுக்கீடு: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் வேல்முருகன்

சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ரூட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கையெழுத்தானது. மேலும் பண்ரூட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதற்கான பட்டியல் வெளியாகி வருகின்றன. பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.

திமுக தலைமையிலான தோழமை கட்சிகளுடைய தலைவர்களின் வாழ்த்துக்களுடன் பண்ருட்டியில் போட்டியிட்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களுக்கு தொண்டாற்றுவேன் என வேல்முருகன் பேட்டியளித்தார். ஏற்கனவே இரண்டு முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் அதிமுக கூட்டணி பலமிழந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெரும். வரலாறு காணாத வெற்றியாக இது அமையும் என்றும் தெரிவித்தார். கடந்த 2001, 2006 ஆம் ஆண்டுகளில் பண்ருட்டியில் பாமக சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் எம்எல்ஏ ஆக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Diva Alliance ,Tamil Livelihood Party ,Udayasuni ,Velmuruhan , DMK Alliance, Panruti constituency, Velmurugan
× RELATED சென்னையில் இந்தியன் ஆயில் அலுவலகத்தை...