×

சுற்றுச்சூழலை பாதிக்கும், கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கான, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் பின்பற்றப்பட்டுள்ளதா? : டி.ஆர் பாலு, எம்பி கேள்வி.

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி. ஆர். பாலு, அவர்கள், நேற்று  (10 மார்ச் 2021), மக்களவையில், சுற்றுச் சூழலை பாதிக்கும், கூடங்குளம் அணு மின் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா?  என்று கேள்வி எழுப்பினார்.

மாண்புமிகு மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களிடம், தமிழ் நாட்டிலுள்ள, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு மின் உலைகள் துவங்கப்பட உள்ளதா? எனவும், அபாயகரமான தீங்கை விளைவிக்கும், 6000 மெகாவாட் திட்டத்திற்கு, தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? எனவும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்றும் விரிவான கேள்வியை, மக்களவையில்,      திரு. டி. ஆர். பாலு, எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பிரதமர் சார்பில், மாண்புமிகு மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் அவர்கள், மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு :-

 தமிழ் நாட்டிலுள்ள, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1000 மெகாவாட் திறனுடைய, ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலைகள், ஓவ்வொன்றும், அடுத்த 66 மற்றும் 75 மாதங்களில், திறன் மிகுந்த ஒப்பந்தக்காரர்களால் கட்டி முடிக்கப்படவுள்ளது என்றும், இந்திய அணு சக்தி கழகத்தின் மேற்பார்வையிலும், அணு சக்தி ஒழுங்காற்று ஆணையத்தின், பாதுகாப்பு விதிகளின்படியும், இந்த ஆறு அணு உலைகளுக்கான, தடையில்லா சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழலுக்கும், பொது மக்களுக்கும், எவ்விதமான ஆபத்தும் நிகழ வாய்ப்பில்லை என்றும்,

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ஆகியன, மத்திய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலம், முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால், இத்திட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, மாண்புமிகு பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள், மக்களவையில், திருப்பெரும்புதுhர் நாடாளுமன்ற உறுப்பினர்,      திரு. டி. ஆர். பாலு, அவர்களுக்கு, விரிவான பதிலை அளித்துள்ளார்.

Tags : Koodankulam ,Balu , டி.ஆர் பாலு,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல்