ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்!!

சென்னை : ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.இதையடுத்து 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவனும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>