சீமான் பிரசாரத்தில் சுவாரஸ்யம் கூட்டம் இல்ல.. வேட்பாளர் பேர் தெரியல... மைக் ரிப்பேர்: மவுன படம் போல் பார்த்த தொண்டர்கள்

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணிமேகலை வினோத் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்,  அப்போது அவர் பேசிக் கொண்டிருந்தபோது, பூந்தமல்லி தொகுதி  வேட்பாளர் பெயரை குறிப்பிட்டு வாக்களிக்குமாறு கூறும்போது, வேட்பாளர் பெயரை மறந்து விட்டார். பின்னர் சில விநாடிகள் யோசித்து பார்த்த அவர் எதிரே தொண்டர்கள் வைத்திருந்த பதாகையில் இருந்த வேட்பாளரின் பெயரைப் பார்த்து கூறி வாக்கு சேகரித்தார். மேலும் பிரசார வாகனம் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் சீமான்  காத்திருந்திருந்தார். எதிர்பார்த்த கூட்டமும் சேரவில்லை. மைக்கும் சரியாக செயல்படவில்லை. இதனால் 2 முறை மைக்குகள் மாற்றப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த சீமான், 9 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.  

ஊமைப்படம் பார்த்த தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை வந்தார்.  அப்போது வேனில் வயர்லஸ் மைக் வாங்கி பேசினார். ஆனால் மைக்கில் சீமான் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் மைக் ரிப்பேர் ஆகிவிட்டது. ஆனால், மைக் ரிப்பேர் ஆனதுகூட தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒயருடன் ஒரு மைக்கை கொடுத்தார்கள். ஆனால் மக்கர் ஆன மைக்கிலேயே தொடர்ந்து அவர் பேசிவந்தார். அவர் பேசியது தொண்டர்கள் காதில் சரியாக விழவில்லை. சீமானின் பேச்சு மவுன படம் பார்த்தது போல் இருந்ததாக தொண்டர்கள் பேசிக் கொண்டனர். அவர் என்ன பேசினார் என்பதே கேட்காமல் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: