×

ஜிம்பாப்வேயுடன் 2வது டெஸ்ட் ஆப்கானிஸ்தான் ரன் குவிப்பு

அபுதாபி: ஜிம்பாப்வே அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 307 ரன் குவித்துள்ளது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இப்ராகிம் ஸத்ரன், ஜாவேத் அகமதி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். அகமதி 4 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரகமத் ஷா 23 ரன் எடுத்து ரன் அவுட்டாக, சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த இப்ராகிம் ஸத்ரன் 72 ரன் (130 பந்து, 8 பவுண்டரி) விளாசி வெளியேறினார். ஹஷ்மதுல்லா ஷாகிதி - கேப்டன் அஸ்கர் ஆப்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் குவித்தது. இவர்களைப் பிரிக்க ஜிம்பாப்வே வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 307 ரன் குவித்துள்ளது. ஹஷ்மதுல்லா 86 ரன் (229 பந்து, 12 பவுண்டரி), அஸ்கர் 106 ரன்னுடன் (135 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : Afghanistan ,Zimbabwe , 2nd Test Afghanistan run accumulation with Zimbabwe
× RELATED பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் போலீஸ் அதிகாரி பலி