×

இஸ்ரோ விஞ்ஞானிக்கு கூகுள் டூடூல் மரியாதை

பெங்களூரு: முக்கிய நாட்கள், வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் கூகுள் அதன் முகப்புப் பக்கத்தில் அவர்கள் தொடர்பான டூடூல் வெளியிட்டு மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவின் 89-வது பிறந்த நாளையொட்டி, பூமி, நட்சத்திரங்கள் செயற்கைக்கோள் மத்தியில் ராவ் படத்தை டூடுல் வெளியிட்டு அவரை நினைவு கூர்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள குக்கிராமத்தில் 1932ம் ஆண்டு பிறந்த உடுப்பி ராமச்சந்திர ராவ், காஸ்மிக் கதிர் (அண்டக் கதிர்) பற்றி ஆராய்ச்சி செய்யும் இயற்பியலாளராக தன் பணியைத் தொடங்கினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர். விக்ரம் சாராபாயின் வழிகாட்டலில் பணியாற்றிய ராமச்சந்திர ராவ், முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நாசாவில் பணியாற்றினார். இவர் 1972ம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் தொடர்பான ஆராய்ச்சிகளில் பங்கேற்றார். 1975ல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 1984 முதல் 1994ம் ஆண்டு வரை இஸ்ரோவின் தலைவராக பதவி வகித்தார்.

Tags : ISRO , Google Doodle tribute to ISRO scientist
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...