சட்டமன்ற பொது தேர்தலில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு: மு.க.ஸ்டாலின்-வைகோ ஒப்பந்தம்

சென்னை: தமிழக சட்ட பேரவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்ெசயலாளர் வைகோ இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 6 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக ேபச்சுவார்த்தை நடத்தப்பட்டன. அதன்படி, திமுக கூட்டணியில் போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘திமுக கூட்டணியில் உள்ள மதிமுக மற்றும் மற்ற தோழமை கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (நேற்று) தொகுதி உடன்பாடு குறித்து திமுகவுடன் மதிமுக கலந்து பேசினோம். இதில், திமுக கூட்டணியில் மதிமுக இந்த சட்டமன்ற தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுராந்தகம் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது. திமுக தலைவரும், நானும் கையொப்பமிட்டிருக்கிறோம்’ என்றார். 

Related Stories:

>