×

சீட் எதுவும் ஒதுக்காமல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு அதிமுக கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறுகிறது? கடும் அதிருப்தியில் ஜி.கே.வாசன்; கட்சியினருடன் இன்று அவசர ஆலோசனை

சென்னை:  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று முதன் முதலாக ஜி.கே.வாசன் தான் அறிவித்தார். அன்றிலிருந்து அதிமுக உடன் நட்பில் இருந்து வந்த ஜி.கே.வாசன் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 தொகுதிகளை கேட்டு வந்தார்.  முதல் முதலாக கூட்டணியை உறுதி செய்த தமாகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தான் அதிமுக தொடர்ந்து பேசிவந்தது. இந்த கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்த பின்பு தமாகாவுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். இதனால் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் 7 தொகுதிகளாவது தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று தமாகா எதிர்பாராத நிலையில் அதிமுக 171 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.அதிமுக இப்படி நடந்து கொண்ட விதம் தமாகாவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேலும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய முடியாது என்ற நிலைக்கு தமாகாவினர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜி.கே.வாசன் இன்று காலை மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்கிறார். அதை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   


Tags : Tamaga ,AIADMK ,GK Vasan , Candidate list release without allocating any seats Tamaga exits from AIADMK? GK Vasan in severe dissatisfaction; Urgent consultation with the parties today
× RELATED ஜி.கே.வாசன் 2ம் கட்டமாக தென்மாவட்டங்களில் பிரசாரம்