×

பங்குனி பூஜை, ஆறாட்டு திருவிழா சபரிமலை நடை 14ம் தேதி திறப்பு: கொரோனா சான்றிதழ் கட்டாயம்

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள், ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. பங்குனி மாத பூஜைகள், ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் ஆறாட்டு திருவிழா நடக்கிறது. 19ம் தேதி காலை 7.15ல் இருந்து 8 மணிக்கு இடையே, தந்திரி கண்டரர் ராஜீவரரு தலைமையில் திருவிழா திருக்கொடியேற்றம் நடக்கிறது. 27ம் தேதி இரவு சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. 28ம் தேதி பம்பையில் ஆறாட்டுடன் திருவிழா நிறைவடைகிறது. அன்றிரவு கோயில் நடை சாத்தப்படுகிறது. பங்குனி மாத பூஜைகள், ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 14 முதல் 28ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். தரிசனத்துக்கு செல்லும்போது 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு 5000 பேருக்கு அனுமதி
* வரும் 15 முதல் 28ம் தேதி வரை தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
* இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.
* sabarimalaonline.org  என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Tags : Bharani Pooja ,Chamarilayan Festival Opening , Panguni Puja, Arattu Festival Sabarimala Walk Opening on the 14th: Corona Certificate Mandatory
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு...