பள்ளிப்பட்டில் மாதிரி வாக்கு பதிவு மையம்

பள்ளிப்பட்டு: சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி, பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் வக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட வி.வி.பேட் மிஷின் மூலம் வாக்குப் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வருவாய் ஆய்வாளர் சுந்தரவேல் முன்னிலையில் வருவாய் துறையினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்கு பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் வகையில் வி.வி பேட் மிஷினிலிருந்து வரும் சீட்டு சரிபார்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories:

>