×

ஹாரி - மேகன் குழந்தைக்கு இளவரசர் பட்டம் வழங்காதது ஏன்? இங்கிலாந்து அரண்மனை விளக்கம்

லண்டன்: இனவெறி காரணமாகத்தான் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைக்கு இளவரசர் பட்டம் தரவில்லையா? என்ற கேள்விக்கு இங்கிலாந்து அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினர் தாமாக விலகிக் கொள்வதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் அவர்கள் இருவரும் பேட்டி அளித்தனர். அதில், தான் ஒரு கறுப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் தனக்கு பிறக்கும் குழந்தையின் நிறம் குறித்து இங்கிலாந்து அரச வம்சத்தினர் கவலைப்பட்டதாக மேகன் கூறினார்.

இந்த இனவெறி காரணமாக, மனம் உடைந்ததாகவும் தற்கொலை எண்ணம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், தனது குழந்தை ஆர்ச்சிக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டதாகவும் மேகன் கூறியது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது, பாரம்பரியமான இங்கிலாந்து அரச பரம்பரைக்கு களங்கம் ஏற்படுத்திய நிலையில், ஹாரி-மேகன் குற்றச்சாட்டுகள் குறித்து இங்கிலாந்து அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைக்கு ஏன் இளவசர் பட்டம் தரப்படவில்லை என்பதற்கான விளக்கம் வருமாறு: ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு ஆர்ச்சி உட்பட 9 பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே இளவரசர், இளவரசி ஆக முடியாது.

இளவரசர் பிரின்ஸ் வில்லியம்சின் 3 குழந்தைகள் மட்டுமே இளவரசர், இளவரசிகளாக உள்ளனர். மன்னர் 5ம் ஜார்ஜ் 1917ல் விதிமுறை ஒன்றை வகுத்தார். அதாவது, மன்னரின் குழந்தைகளுக்கும், மன்னர் மகனின் குழந்தைக்கும், வேல்ஸ் இளவரசரின் மூத்த மகனின் மூத்த மகனுக்கும் மட்டுமே இளவரசர் பட்டம் வழங்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை திருத்தம் செய்யும் அதிகாரம் ராணிக்கு வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி 2012ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இளவரசர் வில்லியம்சின் 3 குழந்தைகளும் இளவரசர், இளவரசிகளாக பட்டம் சூட்டப்பட்டனர். இல்லாவிட்டால் பிரின்சின் மூத்த மகன் ஜார்ஜ் மட்டுமே இளவரசராக பட்டம் சூட்டப்பட்டிருப்பார். அந்த வகையில், ஹாரி-மேகன் தம்பதிக்கு பிறந்த ஆர்ச்சிக்கு அரச வம்சப்படி மவுண்ட்பேட்டன்-விண்ட்சர் பட்டமே சூட்டப்படும். ஆனால், அப்பட்டதை ஹாரி-மேகன் வேண்டாமென தவிர்த்ததாக கூறப்படுகிறது. எனவே, எந்த இனவெறிக்காகவும் ஆர்ச்சருக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்படவில்லை என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.


Tags : Harry ,Megan ,Palace of England , Harry - Why didn't Megan give the baby a princely title? Description of the Palace of England
× RELATED ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு...