அங்கீகரிக்கப்படாத ஸ்கேனிங் மையங்கள் சீல் வைக்கப்படும்: மாவட்ட கலெக்டர் அதிரடி

மங்களூரு:   அங்கீகரிக்கப்படாத ஸ்கேனிங் மையங்களுக்கு சீல் வைக்கப்படும்  என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ராஜேந்திரா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனியார்  மருத்துவமனைகள் கூட நோயாளிகளின் பட்டியலை பராமரிக்க வேண்டும் மென்பொருளில் கர்ப்பிணிப் பெண்களின் பெயர்களைப் பதிவு செய்வதன் மூலம்  ஆஷா  தொழிலாளர்களுக்கு தாய் அட்டைகளை விநியோகிக்க உதவும்.ஸ்கேனிங்  மையங்கள் அங்கீகரிக்கப்படாமல் செயல்படுவதாகவும், சட்டத்திற்கு எதிராக குழந்தையின் பாலினத்தை சோதனை செய்து தெரிவிக்கும் லேப்களுக்கு சீல் வைக்கப்படும்   மாவட்டத்தில் மொத்தம் 174 ஸ்கேனிங் மையங்கள் பதிவு  செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 159 செயல்பட்டு வருவதாகவும், 15 பல்வேறு  காரணங்களுக்காக இயங்கவில்லை என்றும் மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அலுவலகம் தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீப காலமாக கொரோனா தொற்று காரணமாக பலர் வேலை இழந்து தவித்துவருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் அவர்களில் பலர் தற்ேபாது குழந்தை தொழிலாளர்களாக மாறி உள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க அதிகாரிகளை கலெக்டர் நியமித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தை தொழிலாளர்கள் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் - 1986, பிரிவு 17ன் கீழ் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்கள்  அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்று குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து தகவல்களும் கிடைக்க வேண்டும்.

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறை மற்றும் பார் அசோசியேஷன் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்தன. துறைகளைச் சேர்ந்த கள் அதிகாரிகள் 17வது பிரிவின் கீழ் ஆய்வாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories:

>