×

சாலியமங்கலம்-பாபநாசத்திற்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பாபநாசம்: சாலியமங்கலம்-பாபநாசத்திற்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் பெருமாங்குடி, வளத்தாமங்கலம், மட்டையான் திடல், மதகரம், செம்மங்குடி, இடையிருப்பு, கரம்பத்தூர், ரெங்கநாதபுரம், கோவிந்தநல்லூர், அண்ணா காலனி, இரும்புத் தலை, களஞ்சேரி, மன்னன் காலனி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. இக்கிராமங்களை சேர்ந்தவர்கள் பாபநாசம் வருவதென்றால் இருசக்கர வாகனங்களிலோ, லாரிகளிலோ, லோடு ஆட்டோக்களில் ஏறியே வருகின்றனர். இதற்கு காரணம் இச்சாலையில் 3 அரசுப் பேருந்துகள் சென்று வந்தன.

ஆனால் தற்போது ஒரு அரசுப் பேருந்து மட்டுமே சென்று வருகிறது. 2 தனியார் பேருந்துகள் ஒருசில நடை மட்டுமே சென்று வருகிறது.பாபநாசத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருக்கருக்காவூரில் உள்ள கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்து கூட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பாபநாசத்திலிருந்து திருக்கருக்காவூருக்கு ஆட்டோக்கள் செல்கின்றன. கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் பாபநாசத்திற்கு வந்துச் செல்ல அவர்கள் படும் சிரமம் சொல்லிமாளாது. மாவட்ட நிர்வாகமாவது உரிய நடவடிக்கை எடுத்து சாலியமங்கலம் - பாபநாசத்திற்கு வந்து செல்ல அதிக கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Saliumangalam ,Papanasam , Additional bus service to Saliyamangalam-Papanasam: Public demand
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...