மீண்டும் கரி அடுப்புகளுக்கு மாறும் ஏழைப் பெண்கள்.. சாதனை விளக்க விளம்பரங்களில் இருந்து மோடியின் படத்தை நீக்க வேண்டும் : சீதாராம் யெச்சூரி

டெல்லி : எரிவாயு விலையேற்றத்தால் ஏழை பெண்கள் மீண்டும் கரி அடுப்புகளுக்கு மாறி வரும் நிலையில், மோடியின் சாதனை விளக்க பதாகை விளம்பரங்களை நீக்கும் நேரம் வந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடும் உயர்வு, எரிவாயு மானியம் பாதியாக குறைப்பு ஆகிய காரணங்களால் ஏழை, எளியோர் இல்லங்களில் மீண்டும் கரிஅடுப்பு எரியத் தொடங்கி உள்ளது. இது பெண்களின் உடல் நலத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இது குறித்த நாளிதழ் செய்தி ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2021 -2022ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் சமையல் எரிவாயு மீதான மானியம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதை யெச்சூரி சுட்டிக் காட்டியுள்ளார். ஏழைகளின் இல்லங்களில் மீண்டும் கரி அடுப்பு எரியத் தொடங்கி இருப்பதால் உஜ்வாலா யோஜனா திட்டம் படுதோல்வி அடைந்து இருப்பதை அவர் சுட்டிக் காட்டி உள்ளார். ஏற்கனவே பெட்ரோல் நிலையங்களில் இருந்து பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில், அனைத்து அரசு விளம்பரங்களின் இருந்தும் மோடியின் படத்தை நீக்கம் நேரம் வந்துவிட்டதாக யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். 

Related Stories:

More
>