×

புளியஞ்சோலை ஆற்றிலிருந்து நெட்ட வேலம்பட்டி பெரிய ஏரிக்கு கால்வாய் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

துறையூர்: துறையூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெட்ட வேலம் பட்டியில் சுமார் 1300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்,இப்பகுதியில் அனைவருமே விவசாயத்தை நம்பி வாழக்கூடியவர்கள் .அத்துடன் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர், கொல்லிமலையில் இருந்து உற்பத்தியாகும் புளியஞ்சோலை ஆற்றின் வழியாக செல்லும் மழைநீரை பயன்படுத்தியது போக மீதமுள்ள உபரிநீர் காவிரி ஆற்றில் கலக்கிறது .காவிரி ஆற்றில் கலந்து கடலுக்கு வீணாக செல்கிறது, அவ்வாறு வீணாக செல்லும் உபரி நீரை நெட்டவேலம்பட்டி யில் உள்ள பெரிய ஏரி சின்ன ஏரி தேங்கராயன்குட்டை,

வில்லாங்குட்டை, குட்டை ஆகிய இடங்களுக்கு கால்வாய் அமைத்து நீர்வரத்து வந்தால்குடிநீர் பஞ்சம் நீங்கும் புளியஞ்சோலைக்கும், ஏரிக்கும் இடைப்பட்ட தூரம் 3 கிமீ. ஆகும். 1200 ஏக்கர் நஞ்சை விவசாயம் செய்ய வாய்ப்பாக அமையும் என தமிழக அரசுக்கு புகார் மனு அளித்து 2003ம் ஆண்டு மாவட்ட பொதுப்பணித் துறை பொறியாளர் மூலம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணி தொடங்காமல் நின்றுவிட்டது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது 2016ல் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் பூமிக்குள் இருந்து கால்நடைகளுக்கு தேவையான புற்கள் வளரும் கிணறுகளில் தண்ணீர் ஊற்று எடுக்கும். பலமுறை இது குறித்து மனுக்கள் அளித்தும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புளியஞ்சோலை ஆற்றிலிருந்து நெட்ட வேலம்பட்டி பெரிய ஏரி, குட்டைகளுக்கு நீர்வரத்து கால்வாய் வெட்டி தரும் வரை நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என வீடுகளுக்கு முன்பு கறுப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்பதாக கூறினா்.பின்னர் முக்கிய சாலை வழியாக கிராம பொதுமக்கள் கையில் கருப்பு கொடியை ஏந்தியவாறு கோஷம் போட்டு பேரணியாக சென்றனர்.



Tags : Puliyancholai river ,Velampatti big , Villagers boycott election demanding construction of canal from Puliyancholai river to Velampatti big lake
× RELATED புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க தற்காலிக தடை