வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சி

குன்னூர்: குன்னூர் வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் நினைவாக மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் மற்றும் வெலிங்டன் ராணுவ நிலையம் ஸ்வர்னிம் விஜய வர்ஷின் 50வது ஆண்டு வெற்றியை கொண்டாடும் நிகழ்வை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் வெற்றி மற்றும் துணிச்சலை நினைவு கூறும் வகையிலும், வீரர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையிலும் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ராணுவ இசையுடன் பேண்ட் வாத்தியம் முழங்க வீரர்களுக்கு மலர் வளையம் வைக்கப்பட்டது. வெலிங்டன் ராணுவ பாதுகாப்பு சேவை பணியாளர்கள், கல்லூரி லெப்டினன்ட் ஜெனரல் எம்.ஜே.எஸ். கலோன், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஷ்வர் சிங் உட்பட ஓய்வு பெற்ற ராணுவ உயர்அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: