×

எதிரி நாடாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 4.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்த இந்தியா!

டெல்லி : இந்தியாவில் கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகின்றன. மேலும் உள்நாட்டு தேவை போக இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியானர்மர், மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் வினியோகிக்கப்படுகின்றன.

அந்த வரிசையில் இந்த மாத தொடக்கத்தில் இந்தியா 4.5 கோடி  இலவச டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது. Gavi என்ற தடுப்பூசி விநியோகிக்கும் தனியார் அமைப்புடன் இந்தியாவிடமிருந்து தடுப்பூசி வாங்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, தற்போது இந்தியா தடுப்பூசியை அனுப்பியுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியே பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 2.75 கோடி பேருக்கு தடுப்பூசி போடா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து மார்ச் இறுதிக்குள் 4.5 கோடி டோஸ் அளவுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது. வரும் ஜூன் மாதத்திற்குள் மேலும் 1.6 கோடி டோஸ் அளவு தடுப்பூசிகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்ய உள்ளது.


Tags : India ,Pakistan , கொரோனா தடுப்பூசி
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!