அரியானா பேரவையில் இன்று பாஜ அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு: எதிர்க்கட்சிகள் கொறடா உத்தரவு

சண்டிகர்: அரியானா சட்டப்பேரவையில் பாஜ கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ளது. அரியானாவில் பாஜ-ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணி ஆட்சி நடக்கிறது. விவசாயிகள் போராட்டம் காரணமாக பாஜ மீது ஜேஜேபி அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில், பாஜ கூட்டணி அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் விடுத்தது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நடக்க உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ், பாஜ மற்றும் ஜேஜேபி கட்சிகள் தங்களின் அனைத்து எம்எல்ஏக்களும் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. 90 எம்எல்ஏக்களை கொண்ட அரியானா சட்டப்பேரவையில் பாஜ 40, ஜேஜேபி 10 எம்எல்ஏக்களுடன் கூட்டணி ஆட்சி செய்கின்றன. காங்கிரஸ் 30 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. 7 சுயேச்சைகளில் 5 பேரும், அரியானா லோகித் கட்சியின் ஒரு எம்எல்ஏவும் பாஜ அரசுக்கு ஆதரவு அளிக்கின்றன.

Related Stories: