×

பாமகவின் ஸ்லீப்பர் செல் கே.பி.முனுசாமி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்: அதிமுகவுக்கு எல்.கே.சுதீஷ் ‘சாபம்’

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். பாமகவின் ஸ்லீப்பர் செல் ஆக கே.பி.முனுசாமி இருக்கிறார் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ெதரிவித்தார்.  தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையும், கேட்ட தொகுதிகளையும் வழங்க அதிமுக தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொண்டர்களின் கருத்துகளை அனைத்து மாவட்ட செயலாளர்களும் விஜயகாந்த்திடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாங்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளும் கிடைக்காததால் அதிமுக-பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் இன்றுதான் எங்கள் அனைவருக்கும் தீபாவளி. கண்டிப்பாக இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாமகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவர் பாமக ஸ்லீப்பர் செல் ஆக இருக்கிறார். அவர் அதிமுகவிற்காக செயல்படவில்லை. பாமகவிற்கு கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். அதிமுகவை வீழ்த்த தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவார்கள். சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில், ‘தேமுதிக கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்’ என்றார்.

Tags : Bamaga's sleeper cell KP Munuswamy will lose deposit in all constituencies: LK Sudesh 'curse' AIADMK
× RELATED சொல்லிட்டாங்க…