பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்: வழக்கை சிபிஐக்கு மாற்றகோரி முன்னாள் கூடுதல் எஸ்பி வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பியான கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், பாலியல் குற்றச்சாட்டுக்கு  ஆளான கூடுதல் டிஜிபி, ஏற்கனவே இதேபோல வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். தொடர்ந்து இதேபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மீதான புகாரை மாநில காவல்துறையான சிபிசிஐடி விசாரித்தால், அவர் மீது மென்மையான அணுகுமுறையையே கையாள்வார்கள்.

வழக்கை வாபஸ் பெறும்படி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து, அவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள்.  சிபிசிஐடி விசாரித்தால் முறையாக இருக்காது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்தமனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories:

>