×

மக்கள் ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? அமைச்சர் அசோக் கேள்வி

பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் சங்கமேஸ்வர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. பாஜ உறுப்பினர் அரக ஞானேந்திரா கொண்டு வந்த தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் காணப்பட்டது. அப்போது அமைச்சர் அசோக் பேசுகையில் சபாநாயகரின் மாண்புக்கு சிறுமை ஏற்படும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர் நடந்து கொண்ட அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல; பேரவை விதிகளின்படி செயல்படும் நிலையில் சர்வாதிகார தோரணையில் எதிர்க்கட்சியினர் நடந்து கொள்கின்றனர். இது தவறாகும். மக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்கான விவாதம் நடைபெற வேண்டும். இப்போது  நடைபெறுவதை பார்த்தால் குஸ்தி போடுவதற்காக காங்கிரசார் வந்துள்ளது போல் தெரிகிறது. இது மக்கள் ஆட்சி போல் தெரியவில்லை. தாங்கள் நினைத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பது  சர்வாதிகார தோரணையில் காங்கிரசார் செயல்படுகின்றனர் என்றார்.

Tags : Minister ,Ashok , People's rule? Dictatorship? Question by Minister Ashok
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...