×

தபால் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரிகள் கெடுபிடி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று தபால் வாக்கிற்கான ஒப்புதல் பெறுவது, இல்லையெனில் அதற்கான விண்ணப்பக் கடிதத்தை அளிக்க வலியுறுத்துவது ஆகிய நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகின்றனர் என  மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும், நேரடியாக வாக்களிக்க விரும்புகிற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் வாக்களிக்க ஏதுவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டுமே தவிர, அனைவரிடத்திலும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதலை பெற அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது. எனவே கட்டாயப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை முற்றாக கைவிட தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Balakrishnan , Balakrishnan accuses officials of harassing people with disabilities for postal voting
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...