×

குமரி காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்?: அகில இந்திய செயலாளர் நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு

குளச்சல்: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆகவே தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைமை முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் தோறும் நிர்வாகிளை சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாக தெரிகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தேர்வு பணிகளை கட்சி தலைமை முழு வீச்சில் செய்து வருகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு குறித்து, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழ்நாடு வடக்கு மாவட்டங்களின் பொறுப்பாளருமான ஸ்ரீவல்ல பிரசாத் நேற்று குளச்சல் வந்தார். பின்னர் ஒரு தனியார் தங்கும் விடுதியில் கட்சி நிவாகிகளுடன் கருத்து கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பிரின்ஸ் எம்எல்ஏ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராபர்ட் புரூஸ், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாநில வர்த்தக காங்கிரஸ் செயலாளர் ஜாண் சுந்தர ராஜ், மனித உரிமைத்துறை செயலாளர் சாமுவேல் சேகர், இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மாவட்ட  துணைத்தலைவர்கள் கே.டி.உதயம், முனாப், வட்டார தலைவர் கிளாஸ்டன், மீனவர் காங்கிரஸ் தேசிய செயலாளர் சபீன், தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவர் அருள் ஆன்றனி, மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் டாக்டர் பினுலால் சிங், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர்கள் அந்திரியாஸ், பிரான்சிஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகளுடன் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்து கட்சி தலைமை அறிவிக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.  இந்த வாரத்திற்குள் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளிவரும். அதுவரை கருத்து கூறியவர்கள், விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் டென்ஷனில் இருக்க வேண்டியதாக உள்ளது. இன்று மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Kumari Congress ,All India ,Executives , Who are the Kumari Congress candidates ?: Consultation with All India Secretary Executives
× RELATED மராட்டியத்தில் இந்தியா கூட்டணி...