மாலத்தீவு கடல் பகுதிக்குள் திசைமாறி சென்றதால் கைதான மீனவர்கள் விடுதலை

மாலத்தீவு: மாலத்தீவு கடல் பகுதிக்குள் திசைமாறி சென்றதால் கைதான தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 14-ம் தேதி தூத்துக்குடியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் மார்ச் 14-ம் தேதி தூத்துக்குடி வந்து சேர உள்ளதாக இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>