×

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்த பிரிட்டன் நாடாளுமன்ற விவாதத்துக்கு இந்தியா கண்டனம்

லண்டன்: விவசாயிகள் போராட்டம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒருதலைப்பட்சமான விவாதம் நடைபெற்றதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் போராட்டம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் சுதந்திரம் இல்லை என்றும் புகார் எழுந்தது. இதுகுறித்து மின்னணு முறையில் ஒரு லட்சம் புகார்கள் எழுந்த நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய எம்.பி.க்கள் சிலர் இந்தியாவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் போராட்ட செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் குறி வைக்கப்படுவதாகவும் பேசினர். பிரிட்டிஷ் எம்.பி.க்களின் இந்த பேச்சுக்கு பிரிட்டன் இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து பிரிட்டிஷ் ஊடகங்கள் கூட சுதந்திரமாக செய்தி வெளியிடும் நிலையில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லை என எப்படி கூற முடியும் என கூறியுள்ளது. தவறான தரவுகள் மூலம் ஒருதலைப்பட்சமான விவாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags : India ,Delhi , London
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...