×

நெல்லை எஸ்பி அலுவலகம், கல்வி நிலையங்களில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

நெல்லை :  நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம், கல்வி நிலையங்களில் உலக மகளிர் தின விழா, நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. எஸ்பி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு எஸ்பி மணிவண்ணன் தலைமை வகித்து அலுவலகத்தில் பணிபுரியும் அமெச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.  

முன்னீர்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் மகளிர் தின விழா, அறிவியல் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது.  பள்ளி தாளாளர் ஜெயந்தி பாபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியை பெட்ஸி பிரிஸில்லா கலந்து கொண்டு பேசினார்.

வேதியியல் ஆசிரியை தனலட்சுமி வாழ்த்திப் பேசினார்.  பள்ளி ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்களின் பெற்றோரை ஊக்கப்படுத்தும் வகையில் கைவினை பொருட்கள் செய்வது குறித்து சிறப்பு வகுப்புகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. அறிவியல் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர். மேலும் இந்தாண்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சூரஜ்ரெகு வழிகாட்டுதலில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஜெயசீலி ஆகியோர் செய்திருந்தனர்.

பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் மகளிர் தின சிறப்பு சொற்பொழிவு நடந்தது. என்எஸ்எஸ் அலுவலர் ஜெஸ்லின் கனக இன்பா வரவேற்றார்.
கல்லூரி பொறுப்பு முதல்வர் முகம்மது அமீன் தலைமை வகித்தார். துணை முதல்வர் செய்யது முகம்மது காஜா வாழ்த்திப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக சவேரியார் கல்லூரி உதவி பேராசிரியை பிரின்சி கலந்து கொண்டு “21ம் நூற்றாண்டில் மகளிர்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.  நிகழ்ச்சியை என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஜெமி மெர்லின் ராணி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் சாகுல் ஹமீது,  அப்துல் ரஹ்மான், மைதீன் பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.

என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மாரியம்மாள் நன்றி கூறினார். பாளை. சவேரியார் கல்லூரியில் என்எஸ்எஸ் அணிகள் சார்பில், மகளிர் தினத்தையொட்டி கல்லூரி நுழைவு வாயிலில் ‘‘பெண்மையை போற்றுவோம்’’ என்ற தலைப்பில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி நின்றனர்.  மேலும் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கு இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.

கல்லூரி வளாக சாலையில் மாணவிகள், விழிப்புணர்வு வண்ண கோலமிட்டனர்.  லெபோ அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அல்போன்ஸ் மாணிக்கம் தலைமை வகித்தார். ரெக்டர் ஹென்றி ஜேம்ஸ், முதல்வர் மரியதாஸ், துணை முதல்வர் ஜோசப் ஆல்பர்ட் வாழ்த்தி பேசினர். கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் டேவிட் அப்பாத்துரை, சேதுராமலிங்கம் செய்திருந்தனர்.

Tags : Nellai ,SP Office ,Women's Day Celebration , Nellai: Nellai District Police SP Office, World Women’s Day was celebrated enthusiastically yesterday at educational institutions. SP
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!