×

சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!

ரஷ்யா: ரஷ்யாவில் உறைந்த போன ஏரி ஒன்றில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி ஹாக்கி போட்டி நடத்தப்பட்டுள்ளது. இர்குட்ஸ்க் மாகாணத்தில் உள்ள புகழ் வாய்ந்த பைகால் ஏரியில் தான் இந்த கோலாகலம் அரங்கேறியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ரஷ்யாவுக்கான பிரிட்டிஷ் தூதர், பிராங்க்ரேட் முன்னிலையில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் அந்நாட்டின் முன்னணி பிரபல வீரர்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள இந்த பைகால் ஏரி உலகின் பழமையான மற்றும் ஆழமான ஏரி என்று யூனஸ்க்கோவால் போற்றப்படுகிறது.

இதில் இந்த ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழலை வலியுறுத்தி 60க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் அரங்கேறவுள்ளதாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். உலகின் மிக ஆழமான ஏரி என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரி இப்போது பனியால் முழுமையாக உறைந்துள்ளது. குளிர் காலத்தில் இந்த ஏரி உறைந்து, முழுவதும் பனிக்கட்டியாக மாறிவிடும். இந்த ஏரி உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20 சதவீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Russia , Environment, Russia, Frozen Lake, Hockey Tournament
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...