மராட்டிய மாநிலம் தானேவில் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து

தானே: மராட்டிய மாநிலம் தானேவில் பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவுகிறது. தானே மாவட்டம் அசாங்கனில் உள்ள ஆலையில் காலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆலையில் வைக்கப்பட்டிருந்த ரசாயன பீப்பாய்களிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்தின் போது ஆலையில் யாரேனும் பணியில் இருந்தார்களா என தெரியவில்லை. விபத்திற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>