மாபா.பாண்டியராஜன் விருதுநகரில் போட்டி?

சென்னை: தமிழக அமைச்சர் மாபா.பாண்டியராஜன், கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை அடுத்த ஆவடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஆரம்பத்தில் பாஜவில் இருந்தார். பின்னர் விருதுநகரில் போட்டியிட கடந்த முறை சீட்  கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க விருதுநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் விருதுநகரில் சீட் கொடுக்காமல், ஆவடியில் சீட் கொடுக்கப்பட்டு போட்டியிட்டார். ஆனால், கடந்த சில நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடும் அதிருப்தியில் உள்ளாராம். இதனால் ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைக்க, அமைச்சர் பாண்டியராஜனுக்கு விருதுநகரில் சீட்  வழங்கப்படுகிறதாம்.

அதேபோல, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் அதே மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தாராம். இவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் எதிர்ப்பாளராம். இவருக்கும் சீட் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கூறிவிட்டாராம். இதனால் பாண்டியராஜனும், வைகைச் செல்வனும் விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கி வேலை செய்ய தொடங்கிவிட்டார்களாம்.

Related Stories:

>