×

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு: டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான  அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் தொடர்ந்து 5 முறை தேர்வெழுதிய நிலையில், கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு  வரை சென்று, பணி அனுபவ மதிப்பெண்கள் இல்லாததால் பணி வாய்ப்பினை இழந்தேன். இதுவரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு இல்லாத நிலையில், தற்போது புதிதாக வரம்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இது இயற்கை விதிகளுக்கு எதிரானது. இதன் காரணமாக முறையாக பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதால் மாணவர் சமுதாயமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு  தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி  அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Tags : DRP ,President , Post Graduate Teacher Selection: Case for Removal of Age Determination and Publication of New Notice: DRP Chairman Ordered to Respond
× RELATED தமிழ்நாட்டில் மின்சார கார் தயாரிப்பு ஆலையை தொடங்குகிறார் எலான் மஸ்க்?