மாம்பழ தலைவரு மகனை நிறுத்தப் போறாரு...

சி.எம். மாவட்டத்தில இலை கட்சியின் பிரதான கூட்டணியான மாம்பழம், இங்க இருக்கிற 50 சதவீத தொகுதிகளுக்கு காய் நகர்த்துதாம். இதில் மேட்டூரு, ஓமலூரு, வீரபாண்டி, இடைப்பாடி எல்லாம் நம்ம கம்யூனிட்டி அதிகம். அதனால  எங்களுக்குத் தான் ஒதுக்கணும் என்று உரக்க குரல் கொடுக்கிறதாம் மாம்பழம். இது ஒரு புறமிருக்க மணியான மாம்பழத் தலைவரோ, இந்த முறை தனது மகனை களமிறக்க வேணும் என்று கங்கணம் கட்டிக்கிட்டு காய் நகர்த்துறாராம்.  ஆரம்பத்தில் மாம்பழத் தலைவரின் சொந்த ஊர் மேட்டூர் என்பதால், அங்கு அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டதாம். ஆனால் இப்போது தனது மகனை களமிறக்க அவர், ஆர்வம் காட்டுறாராம்.

‘‘எங்க தலைவரு, மகன் தமிழ்குமரனுக்கு மேட்டூர் சட்டமன்ற தொகுதி அல்லது பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்காரு. இந்த தொகுதியில் எங்க கட்சிக்காரங்க, அதிகமாக இருக்காங்க. கடந்த இரண்டு  சட்டமன்ற தேர்தல்களிலும் மேட்டூரில் தலைவரு, தோத்துட்டாரு. சொந்த தொகுதியிலேயே கட்சியின் மாநில தலைவர் தோற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இந்த தொகுதியில் நிர்வாகிகளுக்கு வழி விட தலைவர் மறுப்பதுதான்  முக்கிய காரணம். இதை மைன்ட்ல வச்சு, இந்த முறை, தனது மகனை மேட்டூரில் நிறுத்தப்போறாரு தலைவரு’’ என்கின்றனர் மாம்பழ தொண்டர்கள்.

Related Stories:

>