ராமர் கோயில் கட்ட நன்கொடை தராததால் ஆசிரியர் பணிநீக்கம்: ஆர்எஸ்எஸ் பள்ளி அதிரடி

பல்லியா: உத்தரப்பிரதேசம், ஜக்திஸ்பூரில் இருக்கும் சரஸ்வதி சிசு மந்தீர் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் யஷ்வந்த் பிரதாப் சிங். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கும்படி அவரிடம் நன்கொடை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. யஷ்வந்த் ரூ.80 ஆயிரத்தை நன்கொடையாக வசூலித்து செலுத்தியுள்ளார். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் மாவட்ட பிரசாரகர் சத்யேந்திரா பள்ளிக்கு வந்தபோது, யஷ்வந்தை ரூ.1000 நன்கொடையாக கேட்டு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு யஷ்வந்த் மறுத்த நிலையில், அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பள்ளி முதல்வர் திரேந்திராவிடம் கேட்டபோது, ‘‘நன்கொடை பணத்தை யஷ்வந்த் டெபாசிட் செய்யவில்லை. அவராகவே ராஜினாமாசெய்து விட்டார்” என்றார்.

Related Stories:

>