×

திருநின்றவூரில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள காலி நிலம் அபகரிப்பு: 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை

சென்னை: திருநின்றவூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் நிலம் அபகரிப்பு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நடேசன் என்பவர் தற்போது பெங்களூரில் குடியிருந்து வருகிறார். அவருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் கிராமத்தில் லட்சுமி பிரகாஷ் நகரில் 2400 சதுர அடி கொண்ட காலி இடம் உள்ளது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நயப்பாக்கத்தை சேர்ந்த துரை என்பவர் அவருடைய மகன் ஏசுதாஸ் என்பவருக்கு  ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக ஒரு பாகப்பிரிவினை பத்திரம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

தன்னுடைய சம்மதம் இல்லாமல் தனக்கு தெரியாமல் சட்டவிரோதமாக போலியான ஆவணங்கள் தயாரித்து தன்னுடைய இடத்தை அபகரித்துள்ளது தெரியவந்தது. எனவே அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் 2400 சதுர அடி காலி மனையை பட்டாபிராம் அம்பேத்கர் நகரை சேர்ந்த இறந்து போன துரை என்பவர் கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய மகன் ஏசுதாஸ் என்பவருக்கு ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக ஒரு பாகப்பிரிவினை பத்திரம் ஏற்படுத்தியுள்ளார்,

தொடர்ந்து ஏசுதாஸ் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு மேற்படி இடத்தை கனகராஜ் என்பவருக்கு ஒரு பொது அதிகார ஆவணம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மேற்படி ஆவணங்கள் அனைத்தும் போலியான ஆவணங்களை உருவாக்கி அதன் மூலம் தயார் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் ஆகும். எனவே அதன் அடிப்படையில் கமிஷனர் மகேவஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் வித்யா ஜெயந்த் குல்கர்னி மற்றும் பாலசுப்ரமணியன் தலைமையில் பட்டாபிராம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ஏசுதாஸ் (47), ஆவடி, காமராஜ்நகர் ஜோசப் (52), பட்டாபிராம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சாமுவேல் (47) ஆகிய 3 குற்றவாளிகள் நேற்று கைது செய்தனர்.


Tags : Thiruninravur , 1 crore worth of vacant land confiscated in Thiruninravur: 3 arrested
× RELATED குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி...