முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிகுண்டு நிரப்பிய கார் குறித்து என்ஐஏ விசாரணை

புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு நிரப்பிய கார் நிறுத்தப்பட்டு இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ரிலையன்ஸ் குழும தலைவரான பிரபல தொழிலதிபரின் வீட்டின் அருகே கடந்த மாதம் 25ம் தேதி வெடிகுண்டு நிரப்பிய கார் நின்று கொண்டு இருந்தது. இந்த காரில் இருந்து 20 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார் கடந்த 18ம் தேதி ஐரோலி முலுந்த பாலம் அருகே இருந்து திருடு போயுள்ளது. மேலும் காரின் உரிமையாளரின் சடலம் கடந்த வெள்ளியன்று தானேவில் உள்ள ஓடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related Stories:

More