ஹெலிகாப்டர் விபத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் டசால்ட் மரணம்

பாரிஸ்: ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான பிரான்சின் டசால்ட் நிறுவன வாரிசு ஆலிவர் டசால்ட் செர்கே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ஆலிவர் டசால்ட் (69). நாட்டின் பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர். பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கி வரும் சக்திவாய்ந்த ரபேல் போர் விமானத்தை டசால்ட் நிறுவனமே தயாரிக்கிறது. இந்நிலையில், பிரான்சின் வடக்கே நார்மண்டி நகரில் கலாவ்டோஸ் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, 69 வயதான ஆலிவர் டசால்ட் உயிரிழந்துள்ளார். டசால்ட் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Related Stories:

>