போதைபொருள் மையமாக மாறிய கோயம்பேடு பேருந்து நிலையம்

அண்ணாநகர்: சென்னை நகரின் இதயப்பகுதியான கோயம்பேட்டில் வெளியூர் மற்றும் உள்ளூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இது நீண்ட காலமாக கஞ்சா விற்பனை, பாலியல் தொழில், செயின் மற்றும் செல்போன் பறிப்பு  உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களின் மையமாகத் திகழ்ந்து வருகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘ஆந்திராவில் இருந்து அரசு பஸ்களில் மொத்தமாக கஞ்சா கடத்தி வரப்படுகிறது. பின்னர் அவை சிறுசிறு பொட்டலங்களாக மடிக்கப்பட்டு  கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறை விற்பனை நடைபெறுகிறது. இதற்கென ஒருசில வாலிபர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றி வருகின்றனர்.  

அவர்களுக்கு வரும் செல்போன் அழைப்பின்பேரில் சம்பந்தபட்டவர்களை வரவழைத்து கஞ்சா சப்ளை செய்து வருகின்றனர். மேலும், இங்கு பலர் கஞ்சா மற்றும் குடிபோதையில் மயங்கி கிடக்கின்றனர். அவர்களிடம் இருந்து செல்போன், பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் திருடி வருகின்றனர். இத்தகைய குற்றச்  சம்பவங்களை தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>