×

ரூ.1,330 கோடி நிலக்கரி டெண்டருக்கு எதிரான விகோ நிறுவனத்தின் மேல்முறையீடு மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி

சென்னை: ரூ.1,330 கோடி நிலக்கரி டெண்டருக்கு எதிரான விகோ நிறுவனத்தின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெண்டர் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியதை விளக்கத்தையேற்று ஐகோர்ட் இதனை தெரிவித்துள்ளது. டெண்டருக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட  தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்ற மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டெண்டருக்கான கால அவகாசம், ஏற்கனவே 15 நாட்கள் நீடிக்கப்பட்டு உள்ளதாகவும், வர்த்தக இதழில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மனுதாரருக்கு வழக்கு தொடர தகுதி இல்லை என்று கூறி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Vigo ,Chennai , Vigo's appeal against Rs 1,330 crore coal tender dismissed: Chennai iCourt action
× RELATED கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத்...