கூடலூர் அருகே காமன் கூத்து நாடகம்

கூடலூர் :  கூடலூர் அருகே ஆமை குளம் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் பாரம்பரியமாக நடத்தும் காமன் கூத்து நாடகம் இரவு முழுவதும் விடிய விடிய நடந்தது. இதனை கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தாயகம் திரும்பிய தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களும் இரவு முழுவதும் கண்டு கழித்தனர்.

இது குறித்து காமன் கூத்து கதையை பாடலாகப் பாடி வரும் நாமக்கல்லைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறுகையில்,` பாரம்பரியமிக்க இந்த தமிழ் கலையை தொடர்ந்து அடுத்த தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கலை அழியாமல் பாதுகாக்க அரசு கலைஞர்களுக்கு உதவ வேண்டும். தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான காமன் கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளை 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலைக்காக இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் இக் கலையினை அழியாமல் பாதுகாத்து வந்துள்ளனர். மீண்டும் சொந்த நாடு திரும்பியும் இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் அழியாமல் கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>